டிசம்பர் 4ம் தேதி சூரிய கிரகணம் - இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படுமா?

india-world
By Nandhini Nov 26, 2021 05:17 AM GMT
Report

சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகியவை சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் நிகழ்வாகும்.

சூரிய கிரகணமானது சந்திரன் சூரிய ஒளியின் வழியில் வந்து அதன் நிழலை பூமியில் செலுத்தும். சூரியன் பூமிக்கு இடையே சந்திரன் ஒரே நேர் கோட்டில் வருவதால் இந்த சூரிய கிரகண நிகழ்கிறது.

சூரியனிடமிருந்து வரக்கூடிய ஒளியை பூமிக்கு நேர்கோட்டில் சந்திரன் இடை மறிப்பதால் இந்த கிரகணம் நிகழ்கிறது.

வரும் டிசம்பர் 4ம் தேதி, சனிக்கிழமை அன்று சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அன்று காலை 10.59 மணிக்கு தொடங்கி மாலை 3.07 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கும். அதாவது 4 மணி நேரம் 8 நிமிடங்கள் இந்த கிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மற்றும் அண்டார்டிக்கா உள்ளிட்ட பகுதிகளில் தெரியும்.

இதனால் இந்தியாவுக்கு எந்தவிதமான பாதிக்கும் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய நேரப்படி இரவு நேரத்தில் நிகழ்வதால், இந்த சூரிய கிரகண நிகழ்வை இந்தியாவில் காண முடியாது. இருப்பினும் டிசம்பர் 4ம் தேதி அன்று கிரகணத்தை இணையதளம் மூலமாக நேரடியாக பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 4ம் தேதி சூரிய கிரகணம் - இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படுமா? | India World