இந்திய வீரர்கள் தங்கிய ஹோட்டல் அருகே நடந்த பயங்கர மனித வெடிகுண்டு தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ - நடந்தது என்ன?

india-world
By Nandhini Nov 17, 2021 07:30 AM GMT
Report

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயங்கரவாத தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.மனித வெடிகுண்டு தாக்குதல், தற்கொலைப்படை தாக்குதல் என பல உயிர்களை பறித்து வருகிறார்கள்.

தற்போது உகாண்டா நாட்டில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. குறிப்பாக, இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே இச்சம்பவம் நடந்துள்ளதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நாட்டின் தலைநகர் கம்பாலாவில் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள சென்ற இந்திய பாரா பேட்மிண்டன் வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் கம்பாலாவில்தான் தங்கி இருக்கிறார்கள். இவர்களில் 9 பேர் தமிழ்நாட்டு வீரர்கள். இவர்கள் அனைவரும் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து 100 மீட்டர் தொலைவில்தான் அடுத்தடுத்து 3 தற்கொலைப்படை தாக்குதல்கள் நடந்துள்ளன.

ஆனால், நல்லவேளையாக குண்டுவெடிப்பு சம்பவங்களில் இந்திய வீரர்கள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தாக்குதலில் இந்திய வீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று இந்திய பாரா - பேட்மிண்டன் அணி தனது அதிகாரபூர்வ டுவிட்டர் தகவல் தெரிவித்திருக்கிறது.

மேலும், பயிற்சியாளர் பத்ரிநாத் குண்டுவெடிப்பு வீடியோவைப் பகிர்ந்து, வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். பெற்றோர்கள், உறவினர்கள் யாரும் பயப்பட வேண்டியது கிடையாது என்று கூறியுள்ளார். தற்போது இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இத்தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மூவரும் பயங்கரவாதிகள் என்று கூறப்படுகிறது.