உலகத்தலைவர்களில் முதலிடத்தைப் பிடித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி - ஆய்வில் தகவல்
மிகுந்த அங்கீகாரம் பெற்ற உலகத்தலைவர்களில் இந்திய பிரதமர் மோடி முதலிடத்தில் இருக்கிறார்.
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் மிகுந்த அங்கீகாரம் பெற்ற உலக தலைவர்கள் குறித்த ஒரு ஆய்வு ஒன்றை நடத்தி இருக்கிறது. இந்த ஆய்வில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட உலக தலைவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்திருக்கிறார். 70% வாக்கு பெற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்களில் மிகுந்த அங்கீகாரம் பெற்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
2-வது இடத்தில் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஆபரேட்டரும், 3-வது இடத்தில் இத்தாலி பிரதமர் மரியா டிராகியும் உள்ளனர். மேலும், பிரதமர் மோடியை பொருத்தவரை அவருக்கு 24 சதவீதம் மட்டுமே நிராகரிப்பு இருப்பதாகவும், 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் அவரை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.