டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது - ஏ.கே. 47 பறிமுதல் - போலீஸ் அதிரடி!

1 week ago

டெல்லியின் லக்ஷ்மி நகரில் பாகிஸ்தான் பயங்கரவாதியை போலீசார் கைது செய்து, ஏ.கே .47, கைக்குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

டெல்லியின் லக்ஷ்மி நகரில் தங்கியிருந்த ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதி கைது செய்யப்பட்டு, அவனிடமிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி, ஒரு கைக்குண்டு உள்ளிட்டவை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், அவன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகமது அஸ்ரஃப் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

இது குறித்து, டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு அதிகாரி தெரிவிக்கையில், ரமேஷ் பார்க், லக்ஷ்மி நகரில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பயங்கரவாதியை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு இந்திய நாட்டவரின் போலி அடையாள அட்டையுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தற்போது அவன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவனிடமிருந்து ஒரு கையெறி குண்டு, ஒரு ஏ.கே. 47 துப்பாக்கி, இரண்டு கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், அவருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.   


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்