ஆப்கானிஸ்தானில் ஜி-20 மாநாடு - பிரதமர் மோடி இன்று பங்கேற்பு

1 week ago

இன்று ஆப்கானிஸ்தானில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் இன்று நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

20 நாடுகளை கொண்ட இந்த ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலிய அதிபர், பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இன்று நடக்க உள்ள இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

இம்மாநாட்டில் தலிபான் கிளர்ச்சியாளர்கள் குறித்தும், ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானம் குறைந்துள்ளது குறித்தும் பேச இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போராட்டம் ஆகியவை குறித்தும் முக்கியமாக இந்த மாநாட்டில் கலந்து பேசப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்