3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்தார் டென்மார்க் பிரதமர்
3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சனை பிரதமர் மோடி வரவேற்றிருக்கிறார்.
டென்மார்க் நாட்டின் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் அவர்கள் 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். இவரை வெளியுறவுத்துறை செயலாளர் மீனாட்சி லேகி அவர்கள் வரவேற்றிருக்கிறார்.
இந்நிலையில் மெட்டே பிரெட்ரிக்சன் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்தும் பேச இருக்கிறார்கள். இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டென்மார்க் பிரதமரை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரவேற்றிருக்கிறார்.
அப்போது, டெல்லி ராஷ்டிரபதி பவனில் செய்தியாளர்களிடம் மெட்டே பிரெட்ரிக்சன் பேசுகையில், எங்களின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியாவை நாங்கள் நினைக்கிறோம் என்றும், இந்த வருகை டென்மார்க் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் உறவுகளுக்கான மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
