குடையுடன் விமானத்திலிருந்து இறங்கிய பிரதமர் மோடி : அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு - வைரல் வீடியோ
பிரதமர் மோடி இன்று அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் அவர் விமானத்திலிருந்து இறங்கும் போது லேசாக மழை தூறியதால் குடை பிடித்தபடி இறங்கினார்.அவர் குடையுடன் இறங்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவர்களின் அழைப்பின் பேரில் 4 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று அமெரிக்கா சென்றடைந்துள்ளார். அங்கு அவர் அதிகாலை 4:00 மணி அளவில் விமானத்தில் இறங்கிய போது லேசாக மழை தூறியது. அப்போது, அவர் குடை பிடித்த படியே விமானத்தின் படிக்கட்டிலிருந்து இறங்கினார்.
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசுகிறார்.

