ஜி-7 உச்சி மாநாடு - சிறப்பு அழைப்பாளராக இன்று காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

india-world
By Nandhini Jun 12, 2021 06:37 AM GMT
Report

ஜி-7 மாநாட்டில் காணொலி காட்சியின் வாயிலாக பிரதமர் மோடி இன்று பங்கேற்க உள்ளார். இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய ஜி – 7 அமைப்பின் மாநாடு ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் என்ற இடத்தில் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது.

இந்த ஜி-7 மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுடன் இணைந்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், ‘ஜி – 7’ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் 3 அமர்வுகளில் இன்று பங்கேற்க இருக்கிறார்.

இதற்கு முன்பு 2014ம் ஆண்டு முதல் ஜி7 மாநாட்டில் மோடி பங்கேற்றார். தற்போது இரண்டாவது முறையாக ஜி-7 மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் உலக மக்களின் உடல்நலம் மற்றும் காலநிலை மாற்றத்தை மையமாகக் கொண்டு, தொற்றுநோய்களுக்கு மத்தியில் உலகத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான கருத்துகளை தலைவர்கள் பரிமாறிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி-7 உச்சி மாநாடு - சிறப்பு அழைப்பாளராக இன்று காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்கிறார்! | India World