உலக கோப்பை இந்தியாவுக்குதான் : பிரெட் லீ நம்பிக்கை!
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஐசிசி இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது: 20 ஓவர் கிரிக்கெட்டில் நாங்கள் அதிகமாக சாதித்ததில்லை. அதனை மாற்றுவதற்கு இதுவே சரியான நேரம். அதற்கு எல்லா வகையிலும் நாங்கள் முயற்சிக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகள் உள்ள நிலையில் கோப்பையை வெல்வது எளிதானது இல்லை.
ஆஸ்திரேலிய அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். இதில் டேவிட் வார்னர் முக்கிய வீரராக இருப்பார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் நடத்தப்பட்ட விதத்தால் அவரது நம்பிக்கை குறைந்திருக்கலாம்.
ஆனால் முக்கியமான தருணத்தில் ஜொலிக்கக் கூடியவரும் கூட. மேலும், உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்த கோப்பையில் அதிகமான ரன் குவிப்பில் இந்திய வீரர் லோகேஷ் ராகுலும், அதிகமான விக்கெட் வீழ்த்துவதில் முகமது ஷமியும் முதலிடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

CWC 6: அரிவாளுடன் வந்து குக்குகளை மிரள விட்டு புகழ்- 90 நிமிடத்தில் டாஸ்க்கை முடித்தவர் யார்? Manithan

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
