விளாசி எடுத்த விராட் கோலி - மிரட்டல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா
உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
21வது போட்டி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது போட்டி தர்மசாலா மைதானத்தில் நடைபெற்றது. இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரியல் மிட்செல் 130 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் எடுத்தனர்.
விராட் கோலி மிரட்டல் ஆட்டம்
இதன்பின் 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு விராட் கோலி மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 95 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலமும்,
ஜடேஜா (39*), ரோஹித் சர்மா (46) உள்ளிட்ட மற்ற வீரர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்ததன் மூலம் 48வது ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றது.
இந்தநிலையில், நடப்பு தொடரில் தோல்வியையே சந்திக்காத நியூசிலாந்து அணியை கெத்தாக வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி, நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலிலும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
புள்ளி பட்டியலில் முதலிடம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், நடப்பு தொடரில் தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி,
இதன் மூலம் 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதனால் நியூசிலாந்து அணி முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.