இந்திய அணியிடம் அசிங்கப்பட்டதற்கு இது தான் காரணம் - இங்கிலாந்து கேப்டன் வேதனை

Rohit Sharma Indian Cricket Team Jos Buttler
By Thahir Jul 13, 2022 06:32 AM GMT
Report

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஒரு நாள் போட்டி

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறியது.

இந்திய அணியிடம் அசிங்கப்பட்டதற்கு இது தான் காரணம் - இங்கிலாந்து கேப்டன் வேதனை | India Won The Match England Captain Speech

பும்ராஹ் மற்றும் முகமது ஷமியின் பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 110 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது.

இந்தியா அபார வெற்றி

இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ராஹ் 6 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்பின் வெறும் 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான்,

மற்ற வீரர்களுக்கு வேலை வைக்காமால் தாங்களாகவே இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்ததன் மூலம் இந்திய அணி 10 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரோஹித் சர்மா 76 ரன்களும், ஷிகர் தவான் 31 ரன்களும் எடுத்தனர்.

ஜாஸ் பட்லர் வேதனை

இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜாஸ் பட்லர், இந்த தோல்வி மிகுந்த வேதனையையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியிடம் அசிங்கப்பட்டதற்கு இது தான் காரணம் - இங்கிலாந்து கேப்டன் வேதனை | India Won The Match England Captain Speech

இது குறித்து ஜாஸ் பட்லர் பேசுகையில் “இந்த நாள் எங்களுக்கு மிக கடினமானதாக மாறிவிட்டது. ஆனால் இந்த தோல்வியில் இருந்து உடனடியாக மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப இந்திய அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, ஆனால் எங்களது மோசமான ஆட்டம் எனக்கே பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

பவர்ப்ளே ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக பந்துவீசினர். இந்த தோல்வி குறித்து ஆலோசித்து, எங்கள் தவறுகளை உடனடியாக திருத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

ஜஸ்ப்ரிட் பும்ராஹ் மிக சிறந்த பந்துவீச்சாளர், இந்த போட்டியில் அவரது பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது. தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்” என்று தெரிவித்தார்.