தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி மிரட்டல் வெற்றி பெற்றது இந்திய அணி..!

Rishabh Pant Indian Cricket Team
1 மாதம் முன்

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

டி.20 தொடர்

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி மிரட்டல் வெற்றி பெற்றது இந்திய அணி..! | India Won The Match

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில்,

இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி மிரட்டல் வெற்றி பெற்றது இந்திய அணி..! | India Won The Match

இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 57 ரன்களும், இஷான் கிஷன் 54 ரன்களும் எடுத்தனர்.

திணறிய வீரர்கள்

இதன்பின் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா வீரர்கள்,

கடந்த போட்டிகளை போன்று இல்லாமல் இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கடுமையாக திணறினர்.

தென் ஆப்ரிக்கா வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேறியதால்,

19.1 ஓவரில் 131 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.