நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ரன் குவித்த இந்தியா
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 45வது போட்டியில் இந்திய அணியும், நெதர்லாந்து அணியும் மோதின.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 128* ரன்களும், கே.எல் ராகுல் 102 ரன்களும் எடுத்தனர். இதன்பின் 411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய நெதர்லாந்து அணி வீரர்கள் அதிரடியாக விளையாட தவறினாலும், தங்களால் முடிந்தவரை ஆல் அவுட்டாகாமல் இருக்க மிக கடுமையாக போராடினர்.
இந்தியா அணி அபார வெற்றி
கடுமையாக போராடிய எங்கெபெர்த் 80 பந்துகளில் 45 ரன்களும், 6 சிக்ஸர்கள் விளாசி மாஸ் காட்டிய டீஜா 39 பந்துகளில் 54 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் தங்களது பங்களிப்பை செய்ய தவறியதாலும், அதிரடியாக விளையாட தவறியதாலும் 47.5 ஓவரில் 250 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ராஹ், குல்தீப் யாதவ், ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முன்னாள் கேப்டனான விராட் கோலியும், இந்நாள் கேப்டன் ரோஹித் சர்மாவும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர்