நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஈசியான வழிமுறைகள் இதோ...!

healthtips நுரையீரல்ஆரோக்கியம் நுரையீரலைபாதுக்காகசிலவழிகள் lungshealthy healthytipsforlungs
By Petchi Avudaiappan Feb 16, 2022 06:26 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் நம் அனைவருக்கும் நுரையீரல் மீதான அக்கறை இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நுரையீரலை பாதிக்கும் காரணிகளான புகைப்பிடித்தல் உள்ளிட்டவற்றில் நாம் கொஞ்சம் விலகியே இருக்கிறோம் என்பது இன்னும் ஆறுதல் தரும் செய்தியாகும்.

உலக சுகாதார அமைப்பின் ஆய்வுப்படி உலகின் இறப்புக்கான முதல் 10 முக்கிய காரணங்களில் குறைந்த சுவாச நோய்த்தொற்று, நாள்பட்ட நுரையீரல் தடுப்பு நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை உள்ளது. இத்தகைய சூழலில் நுரையீரல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். 

  • நுரையீரல் பாதுகாப்பு என்று வரும்போது முதலில் நாம் கடைபிடிக்க வேண்டியது புகைப்பழக்கத்தை கைவிட வேண்டியது தான். இது காற்றின் பாதையை சுருக்கி சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இதனால்  நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
  •  நுரையீரல் திறனை மேம்படுத்தும் வகையில் யோகா பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். இதன்மூலம் உங்கள் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனானது கிடைக்கிறது.
  •  காய்ச்சல் மற்றும் நிமோனியாவிற்கான முக்கியமான தடுப்பூசிகளை விரைந்து எடுப்பதால்  நுரையீரல் தொற்றுகளைத் தடுக்கலாம்.
  • வீட்டின் உட்புறம்  காற்றை சுத்திகரிக்கும் இயந்திரங்களை பயன்படுத்துவதோடு சுத்தமான காற்றை கொடுக்கும் செடி, கொடிகளை வளர்க்கலாம். 
  • செர்ரி, மஞ்சள், கீரை வகைகள், பச்சை இலை காய்கறிகள், பீன்ஸ், அக்ரூட் பருப்புகள், பருப்பு வகைகள், நெல்லிக்காய் மற்றும் ஆலிவ் பழங்கள் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற நுரையீரல் மேம்படுத்தும் உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.