டெஸ்ட் போட்டி; இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
2வது மாஸ்டர்கார்டு டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
2வது டெஸ்ட் போட்டி
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் இந்திய அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா அபார வெற்றி
ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 81 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 72* ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு அக்ஷர் பட்டேல் 74 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 261 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.