வான வேடிக்கை காட்டிய இந்திய வீரர்கள் - 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Rohit Sharma Virat Kohli Indian Cricket Team South Africa National Cricket Team
By Thahir Oct 03, 2022 02:17 AM GMT
Report

தென் ஆப்ரிக்கா அணியுடனான டி20 தொடரில் இந்தியா அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 தொடர் 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், கே.எல் ராகுல் 57 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத விராட் கோலி 49 ரன்களும் எடுத்தனர்.

INDvSA

இதன்பின் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு 2 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மார்கரம் 33 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

சதம் அடித்த மில்லர் 

இதன்பின் கூட்டணி சேர்ந்த டேவிட் மில்லர் – குவிண்டன் டி காக் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது.

கடைசி ஓவர் வரை இந்திய அணிக்கு பயம் காட்டிய டேவிட் மில்லர் 46 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் டேவிட் மில்லர் 106 ரன்களும், டேவிட் மில்லர் 48 பந்துகளில் 69 ரன்களும் எடுத்து கொடுத்தாலும்,

INDvSA

பவர்ப்ளே ஓவர்களை சரியாக பயன்படுத்த தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் மட்டுமே எடுத்தது தென் ஆப்ரிக்கா அணி.

INDvSA

இதையடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.