திக்குமுக்காடிய வங்காளதேசம் - இந்திய அணி அதிரடி வெற்றி!

Indian Cricket Team T20 World Cup 2022
By Sumathi Nov 02, 2022 12:17 PM GMT
Report

டி20 உலக கோப்பை போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

டி20

டி20 உலக கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் வங்காளதேசம் மற்றும் இந்திய அணிகள் மோதின. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி.

திக்குமுக்காடிய வங்காளதேசம் - இந்திய அணி அதிரடி வெற்றி! | India Won Against West Indian Team T20

இதை தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், ரோகித் சர்மா களம் இறங்கினர். இதில் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பின்னர் வந்த விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

இந்திய அணி வெற்றி

இதில் கே.எல்.ராகுல் 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இதை தொடர்ந்து வந்த சூர்ய குமார் யாதவ் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் விக்கெட் பறிகொடுத்தார்.

இந்த நிலையில் கடைசி வரை அவுட்டாகமல் நின்ற விராட் கோலி அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். வங்காளதேசம் அணியில் ஹசன் முகம்மது அதிகபட்டசமாக 3 விக்கெட்டுகளையும், சாகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் பின் களம் இறங்கிய வங்காளதேசம் அணி தொடக்கத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.

பின்னர் மழை குறுக்கிட்டதால் 4 ஓவர்கள் குறைக்கப்பட்டு 16 ஓவர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் விளையாடிய வங்காளதேசம் அதிரடியாக விளையாட தொடங்கியது. பின்னர் 16 ஓவர்கள் முடிவில்  5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.