இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி: இந்திய அணி பவுலிங் தேர்வு
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் நார்த்தம்டனில் இன்று நடைபெற உள்ளது.
இவ்விரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் இங்கிலாந்தும், 4-ல் இ்ந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய பெண்கள் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.