முதல்முறையாக பகலிரவு போட்டியில் விளையாடும் இந்திய பெண்கள் அணி
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 6 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
மிதாலிராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி பிரிஸ்டலில் ஜூன் 16-ந்தேதி தொடங்குகிறது.
இப்போட்டி 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய பெண்கள் அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியாகும். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் ஆஸ்திரியாவில் நடைபெறும் 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆசியுடன் இந்திய பெண்கள் அணி மோதுகிறது.
இதில் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இது இந்திய பெண்கள் அணி விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil