U19 மகளிர் T20 உலகக்கோப்பை கிரிக்கெட் - சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா
இந்தியா 2வது முறையாக U19 T20 மகளிர் உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
U19 உலக கோப்பை
ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி மலேசியாவில்நடைபெற்றது.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் மோதியது.
இந்தியா சாம்பியன்
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சால் 20 ஓவர்களுக்கு 82 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மீகே வான் வூர்ஸ்ட் 23 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் கங்கோடி திரிஷா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 83 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 11.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 2வது முறையாக இந்தியா மகளிர் U19 சாம்பியன் பட்டத்தை வென்றது.