ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் : இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது.
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மழைக்காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டன.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 38 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது.
சதிஷா ராஜபக்சே (14), ரவீன் டி சில்வா (15), யாசிரு ரோட்ரிகோ (19), மதீஷா பத்திரானா (14) ஆகியோர் இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் விக்கி ஆஸ்ட்வாய் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்திய அணிக்கு 32 ஓவரில் 104 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 21.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவான்ஷி ஆட்டமிழக்காமல் 56 ரன்களும், ஷெய்க் ரஷீத் 31 ரன்களும் அடிக்க இந்திய வீரர்கள் கோப்பையை வென்றனர்.