“என்ன நடந்தாலும் இலங்கைக்கு ஆதரவு” - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

Dr. S. Jaishankar Sri Lanka
By Swetha Subash May 10, 2022 12:18 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இலங்கை
Report

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளாகிய பொதுமக்கள் அரசிற்கு எதிராக கடும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது இலங்கையே கலவர பூமியாக மாறியுள்ளது.

நேற்றைய தினம் இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜப்கசே விலகிய போதிலும் மக்கள் போராட்டம் கடுமையாகி கொண்டே செல்கிறது. எம்.பி.க்களின் வீடுகளுக்கு தீ வைத்தும் முற்றுகையிட்டும் தவறிழைத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

“என்ன நடந்தாலும் இலங்கைக்கு ஆதரவு” - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் | India Will Support Sri Lanka Says Jai Shankar

தற்போது ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், இலங்கைக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், இலங்கை மக்களுடைய நலனை இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும். இலங்கையின் பொருளாதாரம் மீட்டெடுப்புக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும்.

“என்ன நடந்தாலும் இலங்கைக்கு ஆதரவு” - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் | India Will Support Sri Lanka Says Jai Shankar

இலங்கையில் ஜனநாயகம், உறுதி தன்மை, பொருளாதார மீட்சி ஏற்படுவதை இந்தியா முழுமையாக ஆதாரவளிக்கிறது. மிக அருகில் உள்ள அண்டை நாட்டுடன் வரலாற்று ரீதியான தொடர்பை கொண்டுள்ளது இந்தியா. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலங்கை மக்களுக்கு ரூ.27,000 கோடி மதிப்புள்ள உதவியை இந்தாண்டு இந்தியா வழங்கியது.

தற்போதைய இக்கட்டான சூழலில் இருந்து இலங்கை மக்கல் மீண்டும் வர உதவி செய்தது இந்தியா. இந்திய மக்களும் உணவு, மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளனர். எனவே ஜனநாயக முறையில் மக்கள் எடுக்கும் முடிவுகளை இந்தியா ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.