இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்கும் – பிரதமர் மோடி ட்வீட்..!

Israel Palestine Israel-Hamas War
By Thahir Oct 10, 2023 01:18 PM GMT
Report

இஸ்ரேல் மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியா துணை நிற்கும் 

இஸ்ரேல் – ஹமாஸ் போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், இரு தரப்பிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1500ஐ கடந்து உள்ளது. இந்த நிலையில் போர் நிலவரம் குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எடுத்து கூறினார்.

India will stand by Israel - PM Modi

இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரேல் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்ரேலின் தற்போதைய நிலைமை குறித்து அவரிடம் கேட்டு அறிந்துகொண்டேன். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள், வெளிப்பாடுகளை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது.

எல்லா வகையிலும் தீவிரவாதத்தை இந்தியா எதிர்க்கும். கடினமான நேரத்தில் இந்தியர்கள் இஸ்ரேலுடன் உறுதுணையாக இருப்பர். இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பதிவிட்டுள்ளார்.