‘என் கூட அவர்தான் தொடக்க வீரராக இறங்க இருக்கிறார்...’ - உறுதியாக கூறிய ரோஹித் சர்மா - ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், நவ்தீப் சைனி ஆகிய வீரர்களுக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு கொரோனா உறுதி உள்ளது.
இந்நிலையில், மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுல் அவரது தங்கச்சி திருமணத்திற்காக சென்றிருப்பதால், முதல் போட்டியில் ஆடவில்லை. எனவே மயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷன், மயன்க் அகர்வால் ஆகிய இருவரில் ஒருவர் தொடக்க வீரராக இறங்க வேண்டும்.
நாளை முதல் ஒருநாள் போட்டி நடக்க இருக்கிறது.
இது குறித்து பேசியுள்ள கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால் இன்னும் குவாரண்டினை முடிக்கவில்லை. எனவே என்னுடன் இஷான் கிஷன் தான் தொடக்க வீரராக இறங்குவார். அவர் ஒருவர் தான் இப்போதைக்கு தொடக்க வீரராக ஆடமுடியும் என்று தெரிவித்துள்ளார்.