ஒரு போன் கால் தான்... திடீரென மேடையை விட்டு ஓடி போன மாப்பிள்ளை! அதிர்ந்து போன மணமகள்! நடந்தது என்ன?
கல்யாண பொண்ணு வந்த பிறகு கல்யாண மேடையிலிருந்து திடீரென மாப்பிள்ளை தலைதெறிக்க ஓடினார். இதனால் கல்யாண நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகா, தரிகேர் தாலுகாவைச் சேர்ந்தவர் நவீன். இவருக்கு சிந்து என்ற பெண்ணை பேசி முடித்து கல்யாணத்திற்கு நாளையும் இரு வீட்டார் முடிவு செய்துவிட்டனர்.
அதன்படியே கல்யாணத்தன்று தடபுடல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இவர்களை வாழ்த்த ஊரே கூடி விட்டது. மணமகள் மேடையில் வந்து நின்றாள். திடீரென நவீன் பதறி அடித்து மணமேடையில் இருந்து ஓடினார். இதனால் கல்யாண நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உறவினர்கள் விசாரித்ததில் நவீன் ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் போனது. கல்யாணத்தன்று, நவீனுக்கு போன் செய்த அந்த காதலி, "இந்த கல்யாணத்தை நிறுத்தாவிட்டால், நான் விஷம் குடித்துவிடுவேன்.. நேரில் வந்து எல்லார் முன்னாடியும் விஷயத்தை சொல்லிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதற்கு பயந்து போன நவீன் காதலியை பார்க்க ஓட்டம் பிடித்திருக்கிறார். இதை கேட்டதும், கல்யாண பெண் சிந்து அதிர்ந்து போனார். அந்த மண்டமே கொஞ்ச நேரத்தில் பதறி போனது. இதனையடுத்து, என்ன செய்வது என்று அறியாமல் சொந்தக்காரர்கள் விழித்தனர்.
அந்த கல்யாணத்துக்கு வந்திருந்த உறவுக்கார இளைஞனையே மண்டபத்தில் பெண்ணிற்காக தேடினார்கள். எதிர்பார்த்தபடியே ஒருத்தர் கிடைத்தார். அவருடைய பெயர் சந்திரப்பா. சிந்துவை கல்யாணம் செய்ய சந்திரப்பாவிடம் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சந்திரப்பாவும் சம்மதம் தெரிவித்தார். சிந்துவும் சம்மதம் தெரிவிக்க உடனே கல்யாணம் நடந்து முடிந்தது.