இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ் - அப், இன்ஸ்டாகிராமுக்கு தடை..? மத்திய அரசு இன்றுக்குள் முடிவு..!
இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய முக்கிய சமூக வலைதளங்களை மத்திய அரசு தடை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவை முக்கிய சமூக வலைதளங்களாக உள்ளன. இந்த நிலையில், சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் புதிய விதிகளை ஏற்படுத்தி, இந்த புதிய விதிகள் குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸ்களுக்கு பதிலளிக்காத சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்குவது குறித்து பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் இதுவரை பதிலளிக்கவில்லை என தெரியவருகிறது. மத்திய அரசின் புதிய விதிகளுக்கு பதிலளிக்க இன்றுடன் கால அவகாசம் நிறைவடைவதால் இன்றுக்குள் பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் பதிலளிக்குமா என பலரும் எதிர்பார்த்து கொண்டிருகின்றனர்.
