இனி பயங்கரவாத தாக்குதல் நடந்தால் போராக கருதப்படும் - இந்திய அரசு எச்சரிக்கை
இந்தியாவில் இனி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் அது போராக கருதப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.

ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் என இந்தியா மீதான தாக்குதலுக்கு பெயரிட்டுள்ள பாகிஸ்தான் - அதன் அர்த்தம் என்ன?
பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியழித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவமும் இந்திய எல்லைப்பகுதிகளுக்குள் ட்ரோன் மற்றும் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
போராக கருதப்படும்
பாகிஸ்தானின் தாக்குதல்களை, இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

போர் பதற்ற சூழலில் ரூ.8542 கோடி நிதி பெரும் பாகிஸ்தான் - இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கடன் வழங்கும் IMF
இந்நிலையில், இனி இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றால் அது போராக கருதப்பட்டு, போருக்கான பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு முன்னர் இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு இதன் மூலம் இந்தியா அரசு பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளது.