தீவிரவாதிகளின் புகலிடம்..பெயர காப்பாத்திக்கணும்..கனடாவிற்கு இந்தியா எச்சரிக்கை
இருநாட்டின் உறவில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வரும் சூழலில், கனடா தனது நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய கனடா விவகாரம்
காலீஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் கனடா நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்டதில் இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டிரூடோ பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்திய நாட்டின் தூதர் கண்ட நாட்டில் வெளியேற வேண்டும் என கனடா நாடு அதிரடியாக அறிவித்த நிலையில், அதற்கு பதிலடியாக இந்திய நாட்டில் இருக்கும் கனடா தூதுரக அதிகாரிக்கும் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளிகளின் புகலிடமாக கனடா
இதன் நீட்சியாக இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, குற்றவாளிகளின் புகலிடமாக கனடா உள்ளது என்ற கெட்ட பெயர் ஏற்படாமல் கனடா அரசு செயல்பட வேண்டும் என கூறி, கனடாவிலுள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்நாட்டின் பொறுப்பாகும் என தெரிவித்தார்.

அரசியல் காரணங்களுக்காக இந்தியா மீது குற்றச்சாட்டுகளை கனடா முன்வைக்கிறது என விமர்சித்த அவர், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார் என கூறினார்.
https://www.dinamani.com/india/2023/sep/21/canada-is-a-haven-for-terrorists-centre-govt-4076257.html
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil