எச்சரிக்கையாக இருங்கள்...கனடா மாணவர்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தல்
இந்திய கனடா அரசு இடையே நிலவின் முரண்பாடுகளின் காரணமாக இந்திய அரசு கனடா நாட்டில் வாழும் மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.
மத்திய அரசு எச்சரிக்கை
கனட நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, கனடாவில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு பரப்பப்படுவதால் இந்தியர்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்திய எதிர்ப்பாளர்கள் இருக்கும் இடங்களுக்கு பயணிப்பதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று இந்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விவாகரத்தின் பின்னணி என்ன..?
காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளை இந்தியா தடை செய்த அமைப்புகளாக அறிவித்துள்ள நிலையில், அவை கனடாவில் செயல்பட்டு வருகின்றன. மேலும், கடந்த 2020ம் ஆண்டு பஞ்சாப்பின் இந்து மத போதகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக காலிஸ்தான் புலிப்படை என்ற அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா பயங்கரவாதியாக அறிவித்திருந்த சூழலில் அவர் கனடா நாட்டில் குடியுரிமை பெற்று வசித்து வந்துள்ளார்.
இச்சுழலில், கடந்த ஜூன் 18ம் தேதி ஹர்தீப் சிங் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில், இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடர்பு உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டிரூடோ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காலிஸ்தான் பின்னணி
அதற்கு முன்னதாக, ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க வந்த கனடா பிரதமர் ஜெஸ்டின் டிரூடோவிடம், இந்திய பிரதமர் மோடி காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டுமென என எச்சரிக்கைகளை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகே ஜஸ்டின் டிரூடோ இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற கனடா நாட்டு அமைச்சகம் உத்தரவிட்ட சூழலில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கனடா நாட்டு தூதரக உயர் அதிகாரி 5 நாட்களில் இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான விரிசல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.