இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு

Bcci Ind vs sl Odi tour postponed
By Petchi Avudaiappan Jul 10, 2021 10:41 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

பேட்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா உறுதியானதால் இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடர் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 2ஆம் தர அணி 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 

இதில் முதல் போட்டி ஜூலை 13 ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் மற்றும் உதவி ஊழியர் ஜி.டி.நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். இதனால் ஒருநாள் தொடர் 4 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி முதலாவது ஒரு நாள் போட்டி 18 ஆம் தேதியும் 2-வது ஒருநாள் போட்டி 20 ஆம் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 23 ஆம் தேதியும் நடைபெறுகிறது. 

மேலும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் முறையே 25, 27, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.