கடைசி ஒரு நாள் போட்டி - இலங்கையுடன் இந்தியா இன்று நேருக்கு நேர் மோதல்...!

Sri Lanka India Indian Cricket Team
By Nandhini Jan 15, 2023 06:15 AM GMT
Report

கடைசி ஒரு நாள் போட்டியில் இன்று இலங்கையுடன் இந்தியா மோத உள்ளது.

இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கவுகாத்தியில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியா 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த இரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதியில், இந்திய அணி 43.2 ஓவர்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியையடுத்து, இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

india-vs-sri-lanka-cricket

இந்தியா - இலங்கை நேருக்கு நேர் மோதல்

இந்நிலையில், இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நேருக்கு நேர் மோத உள்ளது.