‘’மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ” என்ன ஆச்சு கோலிக்கு ? தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து வெளியேறுகிறாரா ?
தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து விராட் கோலி வெளியேறுவார் என்று தகவல் வெளியானதால் பரபரப்பு சூழல் நிலவுகிறது. இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.
இதற்கான டெஸ்ட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்திய அணி வீரர்கள் அனைவரும் டிசம்பர் 12 ( நேற்றுக்குள்) மும்பையில் உள்ள தனியார் ஓட்டலின் பயோ பபுளுக்குள் நுழைய அறிவுறுத்தப்பட்டிருந்தது
. இதனையடுத்து ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், பும்ரா உள்ளிட்ட அனைவரும் சென்றுவிட்ட நிலையில் கேப்டன் விராட் கோலி மட்டு
ம் இன்னும் பபுளுக்குள் செல்லவில்லை. மும்பையில் 3 நாட்கள் பபுளுக்கு பிறகு வரும் டிசம்பர் 16ம் தேதியன்று தனி விமானம் மூலம் தென்னாப்பிரிக்கா செல்கின்றனர். இதனால் கோலி பங்கேற்கிறாரா இல்லையா என்ற குழப்பம் எழுந்துள்ளது. பி
சிசிஐ சார்பில் அதிகாரிகள் பலரும் விராட் கோலியை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பார்த்துள்ளனர். ஆனால் அவரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற தொடர்புகளில் அழைப்பினை ஏற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் கோலி பங்கேற்பாரா என்பதிலேயே குழப்பம் நீடிக்கிறது.