தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி; 327 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்

Swetha Subash
in கிரிக்கெட்Report this article
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 60 ரன் எடுத்து அவுட்டானார்.
மற்றொரு தொடக்க வீரரான ரோகேஷ் ராகுல் சதம் எடுத்து அசத்தினார்.
இரண்டாவது நாள் ஆட்டம் மழையால் நேற்று ரத்தானது. இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பெரிதும் எதிர்பார்த்த ரிஷப் பண்ட் 4 ரன்கள், ஷர்துல் தாகூர் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
தென் ஆப்ரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய லுங்கி நிகிடி 6 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜென்சன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கவுள்ளது.