இந்தியாவிடம் தோற்றாலும் அபூர்வமான சாதனை படைத்த பாகிஸ்தான்
கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் இடையேயான டி20 போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
பரபரப்புக்கு மத்தியில் நடந்து முடிந்துள்ளது இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி.
கொழுப்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அபூர்வ சாதனை
மைதானத்தின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததை உணர்ந்த பாகிஸ்தான் கேப்டன் சுமார் 18 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டே வீசினார்.
இதன் மூலம் டி20 உலக கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓவர்கள் சுழற்பந்து வீசப்பட்ட சாதனையை பாகிஸ்தான் சமன் செய்துள்ளது.
இதற்கு முன்னதாக 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இதே கொழும்பு மைதானத்தில் பாகிஸ்தான் 18 ஓவர்கள் சுழற்பந்து வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இந்தியா- பாகிஸ்தான்?
சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் அதிக வெற்றிகளை பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம், இந்திய அணியும் அரையிறுதிக்கு முன்னேறினால் இரு அணிகளும் மோதலாம் அல்லது உலக கோப்பை இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ளும் வாய்ப்பு அமையலாம்.

ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
உயிருக்கு ஆபத்தாய் மாறியுள்ள இதய நோய்: சிங்கபூர் ஷொப்பிங்-க்கு மத்தியில் ஷிரந்தியின் அறிக்கை IBC Tamil