பாவம் தான் பாகிஸ்தான் - உலகக்கோப்பையில் மாஸ் காட்டும் இந்தியா : வரலாறு இதுதான்
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி இதுவரை இந்திய அணியை வென்றதில்லை என்ற வரலாறு இதுவரை திருத்தி எழுதப்படவில்லை. இன்று நடக்கும் போட்டியில் இது தொடருமா? இல்லை மாற்றி எழுதப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எந்த விதமான உலகக்கோப்பையாக இருந்தாலும் சரி வீராப்புடன் பேசுவது, தி்ட்டங்களை வகுப்பது, களத்தில் சீண்டுவது என பல உள்ளடி வேலைகளை செய்தாலும் பாகிஸ்தான் அணி ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவிடம் அடிமேல் அடிவாங்க தான் செய்கிறது.
கடந்த காலங்களில் டி20 உலகக் கோப்பையில் 5 முறை இந்திய அணியுடன் பாகிஸ்தான் மோதியுள்ளது. முதலாவதாக 2007 ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக் கோப்பைப் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. குரூப் டி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் வெற்றி, தோல்வி இன்றி ஆட்டம் டையில் முடிந்தது.போட்டி டையில் முடிந்ததையடுத்து பவுல்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த பவுல் அவுட் முறையில் 3-0 என்ற ரீதியில் இந்திய அணி வென்றது.
அதன்பின் இதேதொடரில் இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கவுதம் கம்பீர் அடித்த 75 ரன்களால் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் கேப்டன் மிஸ்பாவின் கடும் போராட்டத்தால் கடைசியில் 4 பந்துகளில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. ஜோகிதர் சர்மா வீசிய ஓவரில் மிஸ்பா ஸ்கூப் ஷாட் அடிக்க பவுண்டரி எல்லையில் இருந்த ஸ்ரீசாந்திடம் பந்து கேட்சானது. இந்திய அணி5 ரன்களில் வென்று முதல் உலகக் கோப்பையை வென்றது.
இதனைத்தொடர்ந்து 5 ஆண்டுகளுக்குப்பின் 2021 ஆம் ஆண்டு மீண்டும் உலகக்கோப்பைப் போட்டியில் இரு அணிகளும் மோதின. இந்தப்போட்டியில் பாகிஸ்தாைன எளிதாக வீழ்த்தியது இந்திய அணி. முதலில் ேபட்செய்த பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சேஸிங் செய்த இந்திய அணி கோலியின்(78)அதிரடியான ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
2014 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது . முதலில் பேட்செய்த பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பு்கு 130 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 131 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
5வது முறையாக 2016 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் மழை காரணமாக 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தது.இலக்கை விரட்டிய இந்திய அணியில் கோலி 55 ரன்கள் விளாச 15.5 ஓவர்களில் இலக்கை அடைந்து இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: வெடிக்கும் போராட்டங்கள் - ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சின் அதிரடி IBC Tamil
