இன்று தொடங்குகிறது முதலாவது டி20 போட்டி - உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

t20 match india vs newzealand today starts
By Anupriyamkumaresan Nov 17, 2021 12:11 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது. விராட் கோலி, ஷமி, பும்ரா, ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்குகிறது முதலாவது டி20 போட்டி - உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | India Vs Newzealand T20 Match Today Starts

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், அவேஷ்கான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராகுல் டிராவிட் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் போட்டி என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்தவிருப்பதால் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதில் டிம் சவுதி அணியை வழிநடத்துகிறார்.