டிராவில் முடிந்த கான்பூர் டெஸ்ட் - இந்தியாவின் வெற்றியை தடுத்த இரண்டு முக்கிய காரணங்கள் என்ன?

match draw india vs nz
By Anupriyamkumaresan Nov 29, 2021 12:57 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் கான்பூரில் டெஸ்ட் போட்டியில் விளையாடின. இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா.

ஆனால் நியூசிலாந்து அணி 98 ஓவர்கள் விளையாடி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட ஒரு விக்கெட்டை இந்திய அணியின் பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. கடைசி நாள் ஆட்டத்தில் முதல் செஷனில் இந்திய அணியால் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனது போட்டி சமனில் முடிய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

நியூசிலாந்து அணி கடைசியாக விளையாடிய பத்து டெஸ்ட் போட்டிகளில் (இந்த போட்டியையும் சேர்த்து) ஒன்றில் கூட தோல்வி அடையவில்லை. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் ஆட்டம் முன்கூட்டிய முடித்துக் கொள்ளப்பட்டது. ஒருவேளை இன்றைய நாள் ஆட்டத்தில் எஞ்சியிருந்த ஓவர்களை இந்திய அணி வீசி இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.

இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து இந்திய அணியின் பவுலர்கள் அக்சர் பட்டேல் 6 விக்கெட், அஷ்வின் 6 விக்கெட், ஜடேஜா 5 விக்கெட், உமேஷ் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். அனுபவ வீரர் இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

இந்திய அணியின் வெற்றியை தடுத்த இரண்டு காரணங்களில் ஒன்று போதிய வெளிச்சம் இல்லாமை என்றாலும், மற்றொரு முக்கியமான காரணம் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திர மற்றும் அஜஸ் படேல் ஆகிய இரண்டு வீரர்களின் தடுப்பாட்டமே இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணம்.

9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. 9வது விக்கெட் ஆட்டத்தின் 89.2 ஆவது ஓவரில் ஆன நிலையில், இந்த ஜோடி அடுத்ததாக வீசப்பட்ட 8.4 ஓவர்களில் அதாவது 52 பந்துகளிலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

இதில் ரச்சின் ரவீந்திரா 91 பந்துகளை சந்தித்து 18 ரன்களையும், அஜஸ் படேல் 23 பந்துகளை சந்தித்து வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இவர்களது தடுப்பாட்டம்தான் போட்டியை டிரா பெற வைத்தது. அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய மூன்று இந்திய ஸ்பின்னர்களும் எவ்வள்வோ முயற்சித்து கடைசி விக்கெட்டை மட்டும் எளிதில் வீழ்த்த முடியவில்லை