இந்தியா VS நியூசிலாந்து: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் முதல் டி20

Indian Cricket Team New Zealand Cricket Team
By Fathima Jan 21, 2026 07:10 AM GMT
Report

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளது.

இந்நிலையில் இன்று இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டிகள் நடைபெறவிருக்கிறது.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி நாக்பூரில் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்துள்ளதால், வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி களமிறங்கும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என தெரிகிறது.

இந்தியா VS நியூசிலாந்து: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் முதல் டி20 | India Vs Newzealand First T20

AFP

இதேவேளை ஒருநாள் தொடரை வென்றுள்ளதால் ஆட்டநுணுக்கங்களை கற்றுக்கொண்டுள்ள நியூசிலாந்து வீரர்கள் கூடுதல் பலத்துடன் களமிறங்கலாம்.

மேலும் டி20 உலக கிண்ண போட்டிக்கு முன்பாக இரு அணிகளும் மோதும் கடைசி தொடர் இது என்பதாலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இரு அணிகளுக்கான உத்தேச பட்டியல்

இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா அல்லது ஷிவம் துபே, அர்ஷ்தீப்சிங் அல்லது குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

நியூசிலாந்து: டிம் ராபின்சன், டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.

இந்தியா VS நியூசிலாந்து: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் முதல் டி20 | India Vs Newzealand First T20

(CREIMAS for BCCI)