’’என்னபா இது சோதனை ’’ மீண்டும் படுமோசமாக ஆடிய இந்தியா : 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை எடுத்தது.
111 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது நியூசிலாந்து.
தொடர்ந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கப்தில் அதிரடியாக ஆடினர்.
அவர் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தபோது பும்ரா பந்தில் 17 பந்தில் 3 பவுண்டரியுடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வில்லியம்சன் நிதானமாக ஆட, டேரில் மிட்செல் அதிரடியாகவே ஆடினார்.
டேரில் மிட்செல் ஜடேஜா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் என யார் வீசினாலும் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டினார். இருவரது பார்ட்னர்ஷிப்பும் 35 பந்தில் 50 ரன்களை கடந்தது.
தொடர்ந்து அதிரடி காட்டிய டேரில் மிட்செல் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் 34 பந்தில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனாலும், அவரது விக்கெட் இழப்பால் நியூசிலாந்தின் வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
13.4 ஓவர்களில் நியூசிலாந்து 100 ரன்களை கடந்தது. கடைசியில் இந்திய அணி நிர்ணயித்த 111 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது