3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று நேருக்கு நேர் மோதல்

Cricket India Indian Cricket Team New Zealand Cricket Team
By Nandhini Feb 01, 2023 06:42 AM GMT
Report

இன்று நடைபெற உள்ள 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளது.

இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடந்தது.

இப்போட்டியில் இந்தியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 டி20 தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றது.

நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா

கடந்த 29ம் தேதி 2-வது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. இதனையடுத்து களத்தில் இறங்கி ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களத்தில் இறங்கியது. இப்போட்டியின் இறுதியில், இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து, நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் இரு அணிகளும் உள்ளன.

india-vs-new-zealand--3rd-t20i-cricket

இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்

இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

இப்போட்டியில் இந்தியா வெல்லவில்லையென்றால், சொந்த மண்ணில் இந்தியா 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக தொடரை இழப்பதுடன், 20 ஓவர் போட்டித் தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தையும் பறித்து விடும். எனவே, இந்திய அணி தொடரை கைப்பற்ற முழு மூச்சில் இந்தியா விளையாட உள்ளது.