உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி - பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா!

Rohit Sharma Indian Cricket Team New Zealand Cricket Team ICC World Cup 2023
By Thahir Nov 15, 2023 08:24 AM GMT
Report

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தியா – நியூசிலாந்து இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

india- new zealand 1st semi final

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டிக்கான ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் இந்திய அணியுடனான இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணியும் த்னாது ஆடும் லெவனி ல் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். 

இந்திய அணி வீரர்கள்

ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ராஹ், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

நியூசிலாந்து அணி வீரர்கள்

டீவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரியல் மிட்செல், டாம் லதாம், கிளன் பிலிப்ஸ், மிட்செல் சாட்னர், மார்க் சாப்மன், டிம் சவுத்தி, லோகி பெர்குசன், டிரண்ட் பவுல்ட்.