மன்கட் முறையில் ரன் அவுட்.. அதிர்ச்சியில் இங்கிலாந்து - வெடித்த சர்ச்சை!

Cricket Viral Video Deepti Sharma
By Sumathi Sep 25, 2022 08:26 AM GMT
Report

இந்திய வீராங்கணை தீப்தி மன்கட் முறையில் ரன் அவுட் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 3வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

மன்கட் முறையில் ரன் அவுட்.. அதிர்ச்சியில் இங்கிலாந்து - வெடித்த சர்ச்சை! | India Vs England Deepti Sharma Mankad Run Out

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 169 ரன்கள் குவித்து இருந்தது. இங்கிலாந்து அணி 118 ரன்களில் 9 விக்கெட்களை இழந்த போதிலும், கடைசி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் போராடியது. சார்லோட் டீன் சிறப்பாக விளையாடி ரன்களை அணிக்கு சேர்த்தார்.

மன்கட்

இருப்பினும், மன்கட் முறையில் தீப்தி ஷர்மாவால் ஆட்டமிழந்தார். தீப்தி ஷர்மாவின் இந்த ரன் அவுட்டை இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். இது பொதுவாக 'மன்கட்' என்று அழைக்கப்படுகிறது.

மன்கட் முறையில் ரன் அவுட்.. அதிர்ச்சியில் இங்கிலாந்து - வெடித்த சர்ச்சை! | India Vs England Deepti Sharma Mankad Run Out

இங்கிலாந்து கேப்டன் எமி ஜோன்ஸ் இதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தனது தீப்திகு முழு ஆதரவு அளித்துள்ளார். தீப்தி பந்து வீசும் போது, சார்லோட் கிரீஸை விட்டு வெளியே வந்தார்.

தீப்தி 

உடனே தீப்தி ரன் அவுட் செய்ய, இதனை சரிபார்க்க ஆன்பீல்ட் அம்பயர்களால் மூன்றாம் நடுவருக்கு முடிவிற்காக அனுப்பப்பட்டது. முடிவில் அவுட் என அம்பயரால் சொல்லப்பட்டது. கடைசி விக்கெட்டை இப்படி இழந்து தோல்வியடைந்ததில் இங்கிலாந்து கடும் அதிருப்தி அடைந்தது.

முன்பு மன்கடிங் என்று அழைக்கப்பட்டது இப்போது நியாயமற்ற விளையாட்டு அல்ல, முறையான விதியாகி ரன் அவுட் என்று இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.