விடாது துரத்தும் இந்தியா - முன்னிலை பெற்ற இங்கிலாந்து
ஓவல் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. இதனிடையே நேற்று 2 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் ஒலி போப் 81 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 50 ரன்களும் விளாசினர்.
இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளையும், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றில் 43 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 20 ரன்களுடனும், கே எல் ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.