4 வது டெஸ்ட்: மாஸ் காட்டிய இந்தியா இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு
இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 148.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
தற்போது இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதனத்தில் நடைபெற்று வரும் நிலையில் இப்போட்டியில், முதலில் இந்திய அணி பெட்டிங் செய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 61.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்கள் எடுத்தனர்.
India vs England 4th Test: India all-out for 466, set England a target of 368
— ANI (@ANI) September 5, 2021
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 290 ரன்கள் எடுத்தனர். இதனால், இங்கிலாந்து அணி 99 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்க்ஸை தொடங்கியது.
இந்திய அணியில் தொடக்க வீரராக ரோகித் சர்மா, கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 16 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 43 ரன்கள் எடுத்து இருந்தனர்.
நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் கே.எல் ராகுல் ரோகித் சர்மா, புஜாரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா சதம் விளாசி 127 ரன்கள் குவித்தார். புஜாரா 61, கே.எல் ராகுல் 46 ரன்கள் எடுத்தனர். நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 92 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 270 ரன்கள் எடுத்து 171 ரன்கள் முன்னிலையில் இருந்தனர்.
இன்றைய 4-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதும். களமிறங்கிய சிறிது நேரத்திலே ரஹானே ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். பின்னர், அணியின் கேப்டன் கோலி, ஜடேஜா இணைந்து சற்று ரன் உயர்த்தினர். ஒரு புறம் கோலி அடித்து விளையாட மறுபுறம் ஜடேஜா நிதானமாக விளையாடி வந்தார். கோலி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 44 ரன்னில் கிரேக் ஓவர்டனிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
Craig Overton brings an end to India's innings with the wicket of Umesh Yadav.
— ICC (@ICC) September 5, 2021
England have a target of 368 in front of them. Who holds the advantage? ? #WTC23 | #ENGvIND | https://t.co/QGdaGyCg2Y pic.twitter.com/APp8lS21Lm
பின்னர் மத்தியில் இறங்கிய பண்ட், ஷர்துல் தாக்கூர் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர். இவர்களின் விக்கெட்டை பறிக்க இங்கிலாந்து அணி திணறியது. இவர்கள் இருவரும் 110 ரன்கள் எடுத்தனர். அதில் பண்ட் 50, ஷர்துல் தாக்கூர் 60 ரன் எடுத்தார்.
இதையெடுத்து இறங்கிய பும்ரா 24, உமேஷ் யாதவ் 25 ரன்கள் எடுத்தனர். இறுதியாக இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 148.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர். இதனால், இந்திய அணி 367 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் 3, மொயீன் அலி, ஒல்லி ராபின்சன் தலா 2, கிரேக் ஓவர்டன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோ ரூட் தலா 1 விக்கெட்டை பறித்தனர். தற்போது இங்கிலாந்து அணி 368 ரன்கள் இலக்குடன் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கவுள்ளது.