இங்கிலாந்தின் மிரட்டல் பந்துவீச்சு- அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா

By Fathima Aug 15, 2021 12:55 PM GMT
Report

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறி வருகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது போட்டி நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இந்தியா இழந்தது.

அடுத்து விளையாடிய இங்கிலாந்து 391 ரன்கள் எடுத்தது, இதனையடுத்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது.

உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. புஜாரா 3 ரன்களுடன் ரஹானே ஒரு ரன்னுடனும் ஆடி வருகின்றனர்.

கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி மூவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.