மாஸ் காட்டிய இந்தியா..கம்பேக் கொடுத்த இங்கிலாந்து 2ம் நாள் ஆட்டத்தின் கள நிலவரம்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை குவித்தது.
இதில் ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் 129 ரன்னில் அவுட்டானார். ரிஷப் பண்ட் 37 ரன்னிலும், ஜடேஜா 40 ரன்னிலும் வெளியேறினர். இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டும், ஆலி ராபின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Joe Root was left stranded on 180* as James Anderson was out bowled on the final ball of day three. #WTC23 | #ENGvIND | https://t.co/rhWT865o91 pic.twitter.com/VekQkoGAtr
— ICC (@ICC) August 14, 2021
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 49 ரன்னில் ஷமியிடம் வீழ்ந்தார். பேர்ஸ்டோவ் அரை சதமடித்து 57 ரன்னில் அவுட்டானார் ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூ 180 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். தற்போது இங்கிலாந்து 27 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை அடித்து, அதை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இல்லாவிட்டால் இந்த போட்டி டிராவிலோ அல்லது இங்கிலாந்து வெற்றி பெறவோ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.