IND vs AUS; இந்தியாவில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடாதது நல்லதுதான் - ஸ்டீவன் ஸ்மித்..!

Cricket Australia India
By Nandhini Feb 01, 2023 07:30 AM GMT
Report

இந்தியாவில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடாதது நல்லதுதான் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இப்போட்டி பிப்ரவரி 9 முதல் மார்ச் 13 வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் அதை 3-0 அல்லது 2-0 என வென்றால் தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும். எனவே, இந்திய அணிக்கு இத்தொடர் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

india-vs-australia-cricket-steve-smith

ஸ்டீவன் ஸ்மித் கருத்து

இந்நிலையில், இந்தியாவில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடாதது நல்லதுதான் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளர்.

இது குறித்து அவர் பேசுகையில், இந்தியாவில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதில்லை என்ற எங்களது முடிவு சரியானதுதான். அதற்கு பதிலாக வலைபயிற்சியில் அதிகமாக சுழற்பந்துவீச்சாளர்களை பந்து வீச வைத்து ஆயத்தமாவோம். இந்திய மண்ணில் விளையாடுவது எப்போதும் கடினமானதுதான். அதை எதிர்கொள்ள எங்களது வீரர்கள் தயாராக உள்ளனர் என்றார்.