Ind vs Aus: ரன்களை குவிக்கும் ஆஸ்திரேலியா - விக்கெட்டிற்கு மல்லுக்கட்டும் இந்தியா
இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி மார்ச் 9ம் தேதி(நேற்று) அகமதாபாத்தில் தொடங்கியது.
Ind vs Aus
இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடைப்பெற்றுள்ளன. இந்த 3 போட்டியில் இந்திய அணி 2 வெற்றிகள், 1 தோல்வியுடன் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி 3வது டெஸ்ட்டில் வீழ்த்தியது.
இந்த சூழலில் கடைசி போட்டியின் முடிவை பொறுத்தே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்பது தெரியும். 4வது டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் நடந்த கலைநிகழ்ச்சியை இந்திய- ஆஸ்திரேலிய பிரதமர்கள் பார்வையிட்டனர். இதில் 1 லட்சம் 34 ஆயிரம் இருக்கைகள் உள்ளனர்.
திணறும் இந்தியா
இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் 2வது ஓவரில் 10 ரன்கள் மட்டுமே பெற்றது. அதன் பின் 10வது ஓவரில் 30 ரன்கள் மட்டுமே பெற்றது, முதல் விக்கெட் 15.3 ஓவரில் 61 ரன்கள், 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 300 ரன்களை கடந்துள்ளது.
இன்றைய நாள் தொடக்கத்தில் இந்திய அணி ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது