மருத்துவமனையில் இளைஞர்களை வெளுத்து வாங்கிய நர்ஸ்...! - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

Viral Video
By Nandhini Oct 17, 2022 07:19 AM GMT
Report

மருத்துவமனையில் இளைஞர்களை வெளுத்து வாங்கிய நர்ஸ்ஸின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இளைஞர்களை வெளுத்து வாங்கிய நர்ஸ்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாப்ராவில் உள்ள சதார் மருத்துவமனையில் நர்ஸ் ஒருவர் கையில் குச்சியை வைத்து, இளைஞர்களை கடுமையாக தாக்குகிறார்.

சுகாதார சான்றிதழ் தயாரிக்க வந்த மாணவர்களை, அறைக்குள் அடைத்து வைத்து அந்த நர்ஸ் அடித்திருக்கிறார். இவர் அடிக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர், இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலரோ, செவிலியர் தடியால் அடிக்கும் போது அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல், அமைதியாக அடி வாங்குகிறார்கள். அப்போ... அவர்கள் ஏதோ தவறு செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

viral video