புல்டோசர் கொண்டு வீழ்த்தப்பட்ட மரம் - கூடுகளில் இருந்த பறவைக் குஞ்சுகள் தரையில் விழுந்து உயிரிழந்த சோகம்...!

Viral Video
By Nandhini Sep 02, 2022 10:06 AM GMT
Report

புல்டோசர் கொண்டு வீழ்த்தப்பட்ட மரத்தின் கூடுகளில் இருந்த பறவைக் குஞ்சுகள் தரையில் விழுந்து உயிரிழந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

வைரலாகும் வீடியோ

கேரள மாநிலம், மலப்புரம் அருகே சாலை விரிவாக்க பணிகளுக்காக புல்டோசர் கொண்டு சாலையோரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தை வெட்டி சாய்த்தனர்.  அப்போது, அந்த மரம் வேரோடு சாலையில் விழுந்தது. 

மரம் விழுந்தபோது, மரத்தில் இருந்த எண்ணற்ற பறவை கூடுகள் சாலையில் விழுந்து நொறுங்கின. அந்த கூட்டில் இருந்த ஏராளமான பறவை குஞ்சுகள் கீழே விழுந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்தன. 

இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். 

viral video